என் மலர்

  செய்திகள்

  சமயபுரம் மாரியம்மன் கோவில்
  X
  சமயபுரம் மாரியம்மன் கோவில்

  சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.68 லட்சம் வருவாய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்கள் காணிக்கையாக ரூ.68 லட்சத்து 7 ஆயிரத்து 562 ரொக்கமும், 3 கிலோ 330 கிராம் தங்கமும், 3 கிலோ 340 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.
  சமயபுரம் :

  அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை பொருட்கள் மாதம் இரண்டு முறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

  அதன்படி இம்மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணைஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி இணை ஆணையர் சுதர்சன், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகர், மலைக்கோட்டை தாயுமானசாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில்ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

  அப்போது காணிக்கையாக ரூ.68 லட்சத்து 7 ஆயிரத்து 562 ரொக்கமும், 3 கிலோ 330 கிராம் தங்கமும், 3 கிலோ 340 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 46-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்திருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
  Next Story
  ×