என் மலர்

  செய்திகள்

  தமிழ் நாடு அரசு
  X
  தமிழ் நாடு அரசு

  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிதம்பரம் உதவி கலெக்டர் எல்.மதுபாலன், ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை மற்றும் கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  சென்னை:

  தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

  கலை மற்றும் கலாசார ஆணையர் வி.கலையரசி, பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை மற்றும் கூடுதல் கலெக்டரான பிரதிக் தயாள், நிதித்துறையின் துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

  பொது மற்றும் மறுவாழ்வு துறையின் துணைச் செயலாளர் எம்.பிரதீப்குமார், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டார்.

  சிதம்பரம் உதவி கலெக்டர் எல்.மதுபாலன், ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை மற்றும் கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகர மாநகராட்சியின் மண்டல துணை ஆணையராக (வடக்கு) மாற்றப்பட்டுள்ளார்.

  உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையின் இணைச் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

  இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×