என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு
Byமாலை மலர்21 Sep 2021 2:56 PM GMT (Updated: 21 Sep 2021 3:14 PM GMT)
சென்னையில் இன்று மேலும் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,661 ஆக பதிவான நிலையில் இன்று 1,647 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 1,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 48 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 16,993 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,50,159 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,619 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 96 ஆயிரத்து 316 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35,379 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... இமாச்சல பிரதேசத்தில் நான்கு பேர் உயிரை பறித்த செல்பி மோகம்
Next Story
×