என் மலர்

  செய்திகள்

  முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் சிலரிடம் உரையாடிய காட்சி
  X
  முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் சிலரிடம் உரையாடிய காட்சி

  நடைபயிற்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெண் கேட்ட பளீர் கேள்வி.. சுவாரஸ்ய சம்பவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  'திமுக ஆட்சியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
  சென்னை:

  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகும். அது மக்களிடைய நல்ல வரவேற்பையும் பெறும்.

  இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், இன்று காலை அடையாறு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் உரையாடினார்.

  அப்போது ஒரு பெண், 'திமுக ஆட்சியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. இது இப்படியே தொடர வேண்டும்' என்று கூறினார்.

  தொடர்ந்து அவர், 'என்றும் மார்க்கண்டேயன் போலவே இருக்கிறீர்கள். அது எப்படி?' என்று கேட்டார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

  இந்த சுவாரஸ்ய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  Next Story
  ×