search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் மற்றும் உணவின் ருசி தெரியவில்லை என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டார். நேற்று மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மாணவிக்கு மீண்டும் காய்ச்சல் வந்தது. இதனால் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனையொட்டி வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி மருத்துவர் தேவி சுகாதார ஆய்வாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 154 மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறையின் சார்பில் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    மாணவிக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்ட பிறகு மீண்டும் ஓரிரு நாட்கள் பள்ளிக்கு வந்து உள்ளார் . இதனால் சக மாணவிகளுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ? என மாணவிகளும், ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×