search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுத்தையின் கால் தடங்கள்
    X
    சிறுத்தையின் கால் தடங்கள்

    களக்காடு அருகே ஊருக்குள் புகுந்து சிறுத்தைகள் அட்டகாசம் - விவசாயிகளை தாக்க முயற்சி

    களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்த விவசாயிகள் ஜெயராஜ், பாலன்.

    இவர்கள் நேற்று இரவு கீழவடகரை பூலாங்குளம் பத்துக்காட்டில் விளை நிலங்களுக்குள் காட்டுபன்றி, கடமான்கள் புகுந்து விடாமல் தடுக்க காவல் பணிக்கு சென்றனர்.

    அப்போது திடீரென 2 சிறுத்தைகள் ஜெயராஜ் மீது பாய்ந்து, அவரை தாக்க முயற்சி செய்தது. 2 பேரும் கூக்குரல் எழுப்பினர். இதனால் சிறுத்தைகள் அங்கிருந்து ஓடின. அவைகள் விளைநிலங்கள் புகுந்தன.

    இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் பதிந்திருந்த சிறுத்தைகளின் கால்தடங்களை பார்வையிட்டனர்.

    சிறுத்தைகள் ஊர் பகுதியை நோக்கி ஓடியதால் கீழவடகரை பொதுமக்கள் தெருக்களில் கூட்டமாக குவிந்தனர். ஆங்காங்கே தீ வைத்து தடுப்புகள் ஏற்படுத்தினர். வனத்துறையினரும், கிராம இளைஞர்களும் இரவு முழுவதும் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.

    இதனால் கீழவடகரையில் விடிய, விடிய பதட்டம் நிலவியது. கிராமமக்களும் பீதி அடைந்துள்ளனர்.

    ஊருக்குள் புகுந்த சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    Next Story
    ×