search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சீட்டு
    X
    வாக்குச்சீட்டு

    9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை

    9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 15 ஆம் தேதி தொடங்கி 22ம் தேதிவரை நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அதாவது அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும்.  மொத்தம் 27,003 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பு மனு தாக்கல் 15 ஆம் தேதி தொடங்கி 22ம் தேதிவரை நடைபெறுகிறது. 

    9 மாவட்டங்களில் மொத்தம் 14,573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.

    4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். முதல்கட்ட தேர்தலில் 41,93,996 வாக்காளர்களும், 2 ஆம் கட்ட தேர்தலில் 34,65,724 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை 12 ஆம் தேதி நடைபெறும்.  வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ம்தேதி பதவியேற்பார்கள். மறைமுக தேர்தல் அக்டோபர் 22ம் தேதி நடைபெறும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    உள்ளாட்சி தேர்தல் அட்டவணை:


    வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - 15.09.2021
    வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் - 22.09.2021
    வேட்பு மனு பரிசீலனை - 23.09.2021
    வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் - 25.09.2021
    முதற்கட்ட தேர்தல் - 06.10.2021
    2ஆம் கட்ட தேர்தல் - 09.10.2021
    வாக்கு எண்ணிக்கை - 12.10.2021

    Next Story
    ×