search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷி - கவிதா
    X
    குஷி - கவிதா

    புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து

    இயற்பியல் பாடப்பிரிவு மட்டும் சற்று கடினமாக இருந்தது. மற்றபடி தேர்வு மிகவும் எளிமையாகவே இருந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    மாணவ-மாணவிகளின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தன.

    நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

    அதை கருத்தில்கொண்டும், கொரோனா தொற்றை மனதில் வைத்தும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, முன்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 720 (180x4) மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டு மேற்சொன்ன 4 பாடப்பிரிவுகளில் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுகளின் பிற்பாதியில் வரும் 15 வினாக்களில் 10 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

    அந்தவகையில், புதிய வினாத்தாள் வடிவமைப்பில் தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

    மாணவி கவிதா:-

    இயற்பியல் பாடப்பிரிவு மட்டும் சற்று கடினமாக இருந்தது. மற்றபடி தேர்வு மிகவும் எளிமையாகவே இருந்தது. 200-க்கு 180 வினாக்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்கியது, உதவியாக இருந்தது.

    மாணவி குஷி:-

    கொடுக்கப்பட்ட நேரத்தில் தேர்வை எளிதாக எழுதி முடிக்க முடிந்தது. வினாத்தாள் எளிமையாகவே இருந்தது. 500-க்கு மேல் மதிப்பெண் எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். விருப்ப வினாக்களை இந்த முறை அமல்படுத்தியது உபயோகமாக இருந்தது.

    இஷிதா - மதுமிதா

    மாணவி இஷிதா:-

    எதிர்பார்த்ததைவிட வினாத்தாள் கொஞ்சம் பரவாயில்லை. இயற்பியல் பாடப்பிரிவில்தான் வினாக்கள் கடினமாக இருந்தன. இந்த முறை புதிய வினாத்தாள் வடிவமைப்பு பயனுள்ளதாகவே இருந்தது.

    மாணவி மதுமிதா:-

    இயற்பியல் பாடப்பிரிவில் மட்டும் வினாக்களை தேர்வு செய்வது பதில் அளிப்பதில் சிரமம் இருந்தது. வேதியியல், உயிரியலை பொறுத்தவரையில் எளிதாக எழுத முடிந்தது. 600-க்கு மேல் மதிப்பெண் பெறவேண்டும் என்ற முயற்சியில் எழுதியிருக்கிறேன். விடைக்குறிப்புகள் வரட்டும், பார்க்கலாம். குறிப்பாக 200 வினாக்களுக்கு 180 வினாக்கள் எழுதினால் போதும் என்ற முறை, நல்ல முடிவு.

    மொத்தத்தில் வினாத்தாள் சற்று எளிதாக இருந்ததாகவே பெரும்பாலான மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். எப்போதும் ‘பொருத்துதல்' வினாக்கள் அதிகளவில் கேட்கமாட்டார்கள் என்றும், ஆனால் இந்த முறை அதுபோன்ற வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.


    Next Story
    ×