search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாளையில் கட்டிட தொழிலாளி கொலையில் 6 பேர் கைது

    பாளையில் கட்டிட தொழிலாளி கொலையில் 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாளை திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற இசக்கிபாண்டி (வயது 25), கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவருடைய அண்ணன் சேர்மன் (39). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே இசக்கிமுத்துவும், சேர்மனும் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் இசக்கி முத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுத்த சேர்மனுக்கும் வெட்டு விழுந்தது. வெட்டுப்பட்ட இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே இசக்கிமுத்து பலியானார்.

    சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிய சேர்மனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு துணை கமி‌ஷனர் சுரேஷ்குமார், உதவி கமி‌ஷனர் நாகசங்கர், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி (39). இவரது மனைவி கடைக்குச் செல்லும்போது இசக்கிமுத்து அவரை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது சுந்தர பாண்டியனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    தனது மனைவியை கேலி கிண்டல் செய்ய கூடாது என்று அவர் இசக்கிமுத்துவை கண்டித்துள்ளார். ஆனாலும் இசக்கிமுத்து அவ்வப்போது அவரது மனைவியை கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன், திம்மராஜபுரத்தை சேர்ந்த அவரது நண்பர்கள் மாணிக்கராஜா (25), ஸ்ரீ ராம் குமார் (23), முத்துக்குமார் (34), நம்பி நாராயணன் (20), மேலபாட்டத்தை சேர்ந்த பழனி (30) ஆகியோருடன் சென்று இசக்கிமுத்துவை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

    உடனடியாக போலீசார் விரைந்து சென்று திம்மராஜபுரத்திலிருந்து அவர்கள் தப்பி செல்லாதபடி சுற்றிவளைத்தனர். இன்று காலை கொலையாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான சுந்தரபாண்டி, மாணிக்கராஜா, ஸ்ரீராம் குமார், முத்துக்குமார், நம்பி நாராயணன், பழனி ஆகியோரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×