search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதம சிகாமணி எம்பி
    X
    கவுதம சிகாமணி எம்பி

    அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி.க்கு ‘திடீர்’ நெஞ்சுவலி

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் டாக்டர் கவுதம சிகாமணி. கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார்.

    சென்னையில் இருந்த டாக்டர் கவுதம சிகாமணிக்கு நேற்று திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் கிரீம்ஸ்ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

    நெஞ்சுவலி ஏற்பட்டதால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா என்பது பற்றியும் டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.


    Next Story
    ×