search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராமநாதபுரம் அருகே 236 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது

    குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே உள்ள கொண்டுநல்லான்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    கமுதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரசன்னா, தலைமையிலான கமுதி உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார், சோதனை செய்ததில் அவரிடம் இருந்து சுமார் 104 கணேஷ் புகையிலை பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டது.

    அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வந்தது.

    செந்தில்குமாருக்கு குட்கா பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் புதூர் ராஜேந்திரன் (61) மற்றும் அதே ஊரை சேர்ந்த கணேசன் (47) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் இருந்து சுமார் 236 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சட்ட விரோதமாக குட்கா பொருட்களை பதுக்கிய 3 பேரை கைது செய்து 236 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கமுதி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா மற்றும் கமுதி உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சகாதேவன் தலைமையிலான போலீசாரை ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு கார்த்திக் பாராட்டினார்.

    குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04567-230759, ஹலோ போலீஸ் 8300031100, 8778247265, மாவட்ட தனிப்பிரிவு 04567-232110, 04567-232111 தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும், தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப் படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் எச்சரித்துள்ளார்.
    Next Story
    ×