search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    திருச்சியில் கொரோனா பரவல் அதிகரித்தால் காந்தி மார்க்கெட் மூடப்படும்- மாநகராட்சி ஆணையர்

    திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர தாண்டவம் ஆடியது. தினசரி பாதிப்பு 800-ஐ தாண்டிய நிலையில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்நாளை கழித்து வந்தனர்.

    இதனால் அரசு தரப்பில் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதில் திருச்சி காந்தி மார்க்கெட்டும் மூடப்பட்டது.

    இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. அதனால் அதிக அளவில் மக்கள் புழங்கும் இடமாக விளங்குகிறது. ஆகவே 3-வது அலை வியாபாரிகள், பொதுமக்களுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து வியாபாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் வியாபாரிகள் அனைவருமே கூடுதல் கவனத்துடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் கூறிய தாவது:-

    தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியதால் காந்தி மார்க்கெட்டை மாவட்ட நிர்வாகம் மூடியது.

    இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் மாற்று ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் கொரோனாவின் 3-வது அலை மக்கள் மத்தியில் பரவும் என்றும் அதனை முன்னதாகவே நாம் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மத்தியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது அதிகாரிகள் தரப்பில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தெருக்களிலும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வது, மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது, காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இதையடுத்து மீண்டும் கொரோனா பரவல் திருச்சி மாவட்டத்தில் அதிகமானால் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நலன் கருதி மூடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×