search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஆண்கள் ஆக்கி அணிக்கு பதக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி ஆண்கள் அணி 41 வருடங்களுக்கு பிறகு வென்று வரலாற்று சாதனை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம். 41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஆக்கியில் 12-வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஆக்கி அணிக்கு எனது பாராட்டுகள்.

    இந்த வெற்றியுடன் இந்திய ஆக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.   41 வருடங்களுக்கு பிறகு இதை வென்று வரலாற்று சாதனை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    சாதனை வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கிப் போட்டிகளில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கனவை சாத்தியமாக்கிய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

    ஆக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஆனால் 1980-ம் ஆண்டுக்கு பிறகு 41 ஆண்டுகளாக ஆக்கியில் நம்மால் பதக்கம் வெல்ல முடியாதது வேதனையாகவே இருந்து வந்தது. இன்றைய வெற்றியின் முலம் வேதனை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறி இருக்கிறது.

    2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆக்கிப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை முழுமையாக பெற வேண்டும். அந்த அணியில் தமிழகம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அது நிச்சயமாக நிறைவேறும்.

    இவ்வாறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


    Next Story
    ×