search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அசாம் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து, அனைத்துத் தடைகளையும் எதிர்த்துப் போராடி, தன் தாய்க்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வண்ணம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா போர்கோஹெய்ன் பெற்றுத் தந்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்கிறேன். லவ்லினா வென்ற வெண்கலப்பதக்கத்தை விடவும் அவர் வாழ்க்கையே இந்தியர்கள் அனைவருக்கும் சிறந்த ஊக்கமளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×