என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Byமாலை மலர்25 July 2021 8:37 AM IST (Updated: 25 July 2021 8:37 AM IST)
கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்ப்பதற்கும் அனுமதி இல்லை.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது. நேற்று பகலிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீறிப்பாய்ந்து விழுகிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்ப்பதற்கும் அனுமதி இல்லை. மெயின் அருவியில் மட்டும் சற்று தூரத்தில் நின்று அருவியைப்பார்த்து விட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story
×