search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் அருவி
    X
    குற்றாலம் அருவி

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிப்பு

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 74.40 அடியாக உள்ளது. குண்டாறு அணை முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழையும், கனமழையும் மாறி மாறி பெய்து வருகிறது.

    இன்று காலை வரை பெய்த மழையில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைபகுதியில் 12 மில்லி மீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,134 கன அடி தண்ணீர் இன்று காலை வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 113.95 அடி அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 115.81 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 87 கன அடி தண்ணீர் இன்று காலை வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 305 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 74.40 அடியாக உள்ளது. குண்டாறு அணை முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

    கடனாநதி-69.80, ராமநதி-65, கருப்பாநதி-63, அடவிநயினார்-122.25, வடக்கு பச்சையாறு-16.65, கொடுமுடியாறு-28.75, நம்பியாறு-11.87 அடிகளாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

    தொடர்ந்து அணைகளுக்கு வரும் தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.

    குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-12, பாபநாசம்-9, ஆய்க்குடி-8, சிவகிரி-6, மணிமுத்தாறு-5.4, ராமநதி-5, கன்னடியன் கால்வாய்-3.2, தென்காசி-2, குண்டாறு-1, அம்பை-1


    Next Story
    ×