search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது வெளியாகும்?- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

    மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    சென்னை:

    பிளஸ்-2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

    அந்தவகையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    முக ஸ்டாலின் 

    இந்த நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சென்னையில் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘பிளஸ்-2 மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்? என்று ஏற்கனவே அறிவித்தபடி, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் இருக்கிறது. முதல்-அமைச்சர் எப்போது வெளியிட சொல்கிறாரோ?, அன்றைய தினம் தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    இதேபோல், மாவட்ட முதன்மை அலுவலர்கள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. அதில் அவர்களிடம் இருந்து பல்வேறு விதமான தகவல்கள் குறித்து கேட்க இருக்கிறோம். அதிலும் குறிப்பாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டதா? என்பது குறித்து கேட்கப்பட இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்’’ என்றார்.


    Next Story
    ×