search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

    மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்தார் ரஜினிகாந்த்.

    நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். 

    இதற்கிடையே, ரஜினிகாந்த் ஜூலை 12-ம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற செயல்பாடு குறித்து நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
    Next Story
    ×