search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானதி சீனிவாசன்
    X
    வானதி சீனிவாசன்

    நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது - வானதி சீனிவாசன் டுவீட்

    சட்டசபைத் தேர்தலின்போது வலிமை அப்டேட் எப்போது என கேட்ட ரசிகருக்கு, நான் வெற்றி பெற்றதும் வலிமை பட அப்டேட் நிச்சயம் கிடைக்கும் என வானதி சீனிவாசன் கூறியிருந்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

    முன்னதாக, தேர்தலின்போது டுவிட்டரில் வீடியோ பதிவிட்ட வானதியிடம் அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் வேண்டும் என கேட்டிருந்தார்.

    அதற்கு பதிலளித்த அவர், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என கிண்டலாகக் கூறியிருந்தார்.

    இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற வானதியிடம் நீங்க ஜெயித்து விட்டீர்கள், எங்களுக்கு வலிமை பட அப்டேட் எப்போது கிடைக்கும்? என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

    அஜித்

    இதற்கிடையே, தற்போது அஜித் ரசிகர்களின் இரண்டாண்டு காத்திருப்புக்கு விடை கிடைத்துள்ளது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வடிவிலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது டுவிட்டரில், நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×