search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வருகிறது

    கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. கோவையில் 407 பேரும், ஈரோட்டில் 311 பேரும், சேலத்தில் 228 பேரும் புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை ஏப்ரல் மாதத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை எட்டியது. உயிரிழப்பும் அதிகமாக இருந்தது.

    தமிழக அரசு எடுத்த அதிரடி தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அதிகமாக இருந்தது.

    சுகாதாரத்துறை அந்த மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதை அடுத்து அங்கும் தற்போது பாதிப்பு குறைந்துள்ளது.

    தினசரி பாதிப்பு 30 ஆயிரம், 20 ஆயிரம், 10 ஆயிரம் என படிப்படியாக குறைந்தது. உயிரிழப்பும் குறைக்கப்பட்டது. பாதிப்பு குறைந்தாலும் கொரோனா பரிசோதனைகளை சுகாதாரத்துறை இதுவரையில் குறைக்கவில்லை.

    தினமும் 1.5 லட்சம் பரிசோதனை தமிழகம் முழுவதும் எடுக்கப்படுகிறது. தற்போது 34 ஆயிரத்து 477 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று புதிதாக 3,479 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், 3,855 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் சுகாதாரத்துறை அறிக்கை தெரிவிக்கின்றது.

    சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    2-வது அலை முடிவுக்கு வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. கோவையில் 407 பேரும், ஈரோட்டில் 311 பேரும், சேலத்தில் 228 பேரும் புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    சென்னையில் பாதிப்பு 209 ஆக குறைந்துள்ளது. திருச்சி 146, மதுரை 65 என பாதிப்பு குறைந்து வருகிறது.

    24 மாவட்டங்களில் இரண்டு இலக்க அளவில் பாதிப்பு உள்ளது. 22 மாவட்டங்களில் பாதிப்பு 50-க்கு குறைவாக பதிவாகி உள்ளது. பெரம்பலூரில் தான் மிக குறைந்த அளவு பாதிப்பாக 22 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    73 பேர் இறந்ததில் 10 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. சேலம், திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருவள்ளூர், தேனி மாவட்டங்களில் உயிரிழப்பு தலா 4 ஆக உள்ளது.

    தமிழகத்தில் இதுவரையில் 25 லட்சத்து 3,481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 33 ஆயிரத்து 132 பேர் உயிரிழந்துள்ளனர்.


    இதையும் படியுங்கள்... இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 43,733 பேருக்கு தொற்று

    Next Story
    ×