search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    சென்னை மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

    சசிகலா அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வரும் நிலையில் அதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.30 மணிக்கு வந்தார்.

    அவர் சென்னையில் உள்ள 9 மாவட்டச் செயலாளர்களை அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனையில் சென்னை மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெங்கடேஷ் பாபு, ஆர்.கே.ராஜேஷ், ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, கே.பி.கந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இவர்களுடன் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    சமீப நாட்களாக சசிகலா அ.தி.மு.க. நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வரும் நிலையில் அதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

    முன்னதாக தலைமை கழகத்தில் அ.ம.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளர் வெற்றிநகர் சுந்தர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் விஷ்வா சந்தோஷ், கொளத்தூர் பகுதி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    Next Story
    ×