search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணை நீர்மட்டம் 5 நாட்களில் 3 அடி சரிவு

    மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு 900 கனஅடி, மதுரை, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 69 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
    ஆண்டிப்பட்டி:

    ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு நேற்று காலையுடன் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் வைகை அணை நீர்மட்டம் 5 நாட்களில் 3 அடி சரிந்தது.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தொடர் மழை மற்றும் கூடுதல் நீர்வரத்து காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் கடந்த 23-ந்தேதி 67.29 அடியாக உயர்ந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 23-ந்தேதி காலை வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறந்துவிடப்பட்டது. இது தவிர மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு 900 கனஅடி, மதுரை, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 69 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்தநிலையில் அணைக்கு சராசரியாக 1,500 கனஅடி தண்ணீர் மட்டுமே நீர்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிய தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 63.98 அடியாக காணப்பட்டது. அதாவது கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3.31 அடி சரிந்து உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்காக கடந்த 5 நாட்களில் மட்டும் 1,000 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பது நேற்று காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதேநேரம் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் கால்வாய் வழியாக தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×