search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்காததால் பொதுமக்கள் போராட்டம்

    தமிழக அரசு கொரோனா நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்க உத்தரவிட்டிருந்தது.
    நெல்லை:

    நெல்லை டவுன் தெற்கு ரத வீதியில் கூட்டுறவு ரே‌ஷன் கடை உள்ளது. இந்த கடையில் மாநகராட்சி 41 மற்றும் 42 வார்டுக்குட்பட்ட 450 குடும்ப அட்டைதாரர்கள் ரே‌ஷன் பொருள் வாங்கி வருகின்றனர்.

    தமிழக அரசு கொரோனா நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்க உத்தரவிட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் இந்த கடையில் உள்ள 450 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது.

    14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பின்னர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்காமல் ரே‌ஷன் கடை பணியாளர்கள் ஏமாற்றி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கடந்த 5 நாட்களாக மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்குவோம் என ரே‌ஷன் கடை பணியாளர்கள் கூறி வந்ததால் தினமும் பொதுமக்கள் ரே‌ஷன் கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இன்றும் பொதுமக்கள் மளிகை தொகுப்புகளை வாங்குவதற்காக ரே‌ஷன் கடைக்கு காலை 7 மணிக்கே வருகை தந்தனர்.

    ஆனால் கடை 9 மணி வரை அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் கோபமடைந்து ரே‌ஷன் கடை முன்பாக போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×