search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு

    டெல்டா-பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

    மகாராஷ்டிரா, மத்திய  பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் பரவி வருகிறது.  

    இந்நிலையில்  டெல்டா-பிளஸ்  கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ்


    இந்த சூழலில் தமிழ் நாட்டில்   டெல்டா-பிளஸ்  வகை கொரோனா பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


    இந்தியாவில் நேற்றுவரை 22 பேருக்கு   டெல்டா-பிளஸ்  கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருந்தது.
    Next Story
    ×