search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை: 

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

    தமிழக அரசு

    மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28-ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×