search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ரெயில் நிலையம்
    X
    மதுரை ரெயில் நிலையம்

    மதுரை கோட்டத்தில் தென் மாவட்ட ரெயில்களின் நேரம் 16-ந் தேதி முதல் மாற்றம்

    மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட தென்மாவட்ட ரெயில்கள் ஒரு சில ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும், வருகை தரும் நேரம் வருகிற 16-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை கோட்டத்தில் உள்ள தென்மாவட்டங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் 65 சதவீத ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, ஒரு சில தென் மாவட்ட ரெயில்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரமாற்றம் வருகிற 16-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    அதன்படி, புனலூரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மதுரைக்கு இயக்கப்படும் ரெயில்(வ.எண்.06730) வருகிற 16-ந் தேதி முதல் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்பட்டு மதுரை ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும். சென்னையில் இருந்து மதுரை, ராஜபாளையம் வழியாக கொல்லம் வரை செல்லும் ரெயில் (வ.எண்.06101) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டு கடையநல்லூர் ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 3.15 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் (வ.எண்.06102) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு சென்றடையும்.

    நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை வரை பாசஞ்சர் ரெயிலாக இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்ட சிறப்பு ரெயில் (வ.எண்.06321) நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 6.25 மணிக்கு புறப்படும். மதுரை ரெயில் நிலையத்துக்கு மதியம் 12 மணிக்கு வந்து சேரும். இரவு 7 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில், (வ.எண்.06322) அம்பாத்துறையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு 2.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயில் வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் ரெயில்நிலையத்துக்கு வழக்கமான நேரத்தில் சென்றடையும்.

    நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.02667) விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்பட்டு 1.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மதுரையில் இருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    சென்னையில் இருந்து மதுரை வழியாக கொல்லம் வரை இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06723) நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 07.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடையும். மதியம் 1 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையம் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் (வ.எண்.06724) கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும். விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும்.

    விழுப்புரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.06867) கொளத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 9.45 மணிக்கு புறப்படும். சோழவந்தான் ரெயில் நிலையத்தில் இருந்து 10.20 மணிக்கு புறப்பட்டு மதுரை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 11.30 மணிக்கு வந்து சேரும்.
    Next Story
    ×