search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொரோனா தொற்று 34 சதவீதம் குறைந்தது

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா பரவலின் 2-வது அலை கடந்த மே மாதத்தில் தீவிரமாக பரவி உச்சத்தை தொட்டது. மே மாதத்தின் நடுவில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமாக சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு 7,500-க்கு மேல் பதிவானது.

    தமிழகம் முழுவதும் மே மாதத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் அதிகரித்தது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது.

    சென்னையிலும் தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்தது. கடந்த சில தினங்களாக சென்னையில் தினசரி பாதிப்பு 2000-க் கும் கீழ் குறைந்தது. சென்னையில் நேற்று 1437 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2 வாரங்களில் சென்னையில் தினசரி பாதிப்பு சராசரியாக 34 சதவீதமாக குறைந்து உள்ளது.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் குறைந்தது. அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 50 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது. இங்கு இதற்கு முன்பு கடந்த வாரத்தில் பாதிப்பு 309 ஆக இருந்தது. அது தற்போது 168 ஆக குறைந்துள்ளது.

    ஆனால் தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு சிறிதளவே குறைந்து தொடர்ந்து நீடிக்கிறது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 8 சதவீதமும், ராயபுரம் மண்டலத்தில் 10 சதவீதமும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 16 சதவீதமும் மட்டுமே பாதிப்பு குறைந்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    இந்த 3 மண்டலங்களிலும் கடந்த மே மாதம் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினசரி பாதிப்பு 485 ஆக இருந்தது. கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை இது 429 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல் தேனாம்பேட்டை, அடையாறு, மாதவரம், வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் நகரத்தின் மொத்த சராசரி பாதிப்பு குறைந்த அளவே உள்ளது.

    சென்னையில் மண்டலம் வாரியாக நோய் தொற்று குறைவு சதவீதம் வருமாறு:- 

    திருவொற்றியூர் - 461

    மணலி-124 

    மாதவரம்-1,088

    தண்டையார்பேட்டை-1,427

    ராயபுரம்-1,903

    திரு.வி.க.நகர்-2,623

    அம்பத்தூர்-2,964

    அண்ணாநகர்-3,192

    தேனாம்பேட்டை-3,287

    கோடம்பாக்கம்-3,172

    வளசரவாக்கம்-2,380

    ஆலந்தூர்-1,663

    அடையாறு-2,771

    பெருங்குடி-2,035

    சோழிங்கநல்லூர்-1,056.

    Next Story
    ×