search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு- முதலமைச்சர் அறிவிப்பு

    கடந்த ஆண்டு ஜனவரி முதல் காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

    * காலதாமதக் கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தமிழக அரசு ஈடு செய்யும்.

    தமிழக அரசு

    * 21-30 நாட்கள் வரையிலான காலதாமதக் கட்டணம் ரூ.100, 30 நாட்கள் - 1 ஆண்டு வரையிலான காலதாமதக் கட்டணம் ரூ.200,  1 ஆண்டுக்கு மேலான காலதாமதக் கட்டணம் ரூ.500 ஆக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    * கடந்த ஆண்டு ஜனவரி முதல் காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×