search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 320 ஆக குறைந்தது

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் 320 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நாகர்கோவில் மாநகர பகுதியில் மட்டும் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 23 பேரும், கிள்ளியூரில் 28 பேரும், குருந்தன்கோட்டில் 30 பேரும், மேல்புறத்தில் 34 பேரும், முஞ்சிறையில் 8 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 22 பேரும், திருவட்டாரில் 48 பேரும், தோவாளையில் 15 பேரும், தக்கலையில் 34 பேரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ஆண்கள் 175 பேரும், பெண்கள் 145 பேரும், குழந்தைகள் 11 பேரும் பாதிப்புக்குள்ளாகி ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,147 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 43 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 10 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சோதனை சாவடிகளிலும் களப்பணியாளர்கள் மூலமாகவும், தினமும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை 7 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 62,112 பேருக்கு ரூ.1,46,36,396 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உள்பட மற்ற அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 20 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,066 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10பேர் பலியாகி உள்ளதால் சாவு எண்ணிக்கை 1,076 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×