search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறந்த குழந்தை
    X
    பிறந்த குழந்தை

    பிறந்த குழந்தைக்கு கருப்பை தொற்று மூலம் கொரோனா பரவியது

    குழந்தைக்கு வெண்டிலேசன் மூலம் 5 நாட்களும் அதன் பின்னர் உயர்ரக ஆக்சிஜன் தெரபி மூலம் 3 நாட்களும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    சென்னை:

    கொரோனா வைரசால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டாலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு நோய் தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரிய நிகழ்வாக பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    திருவேற்காட்டை அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.

    பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு சுவாதிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ்

    குழந்தையின் தாய்க்கு அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டு பின்னர் “நெகடிவ்” ஆகி இருந்தது. அந்த குழந்தைக்கு கருப்பை தொற்று மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    கரு ஹைப்பர்- இன்ப்ள மேட்டரி (அழற்சி) சிண்ட்ரோம் மூலம் இடமாற்ற நோய் தொற்று ஏற்பட்டு பாதிப்பு உண்டானது. இது ஒரு அரிதான நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    37 வாரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்ட நுரையீரல் 80 முதல் 90 சதவீதம் வரை செயல்பாடு இருந்தது. குழந்தைக்கு வெண்டிலேசன் மூலம் 5 நாட்களும் அதன் பின்னர் உயர்ரக ஆக்சிஜன் தெரபி மூலம் 3 நாட்களும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் 3 நாட்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டது. 11 நாட்கள் சிகிச்சைக்கு பின் பூரண நலம் பெற்ற குழந்தை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
    Next Story
    ×