search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காரமடை அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது

    காரமடை அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லப்பனூர் பகுதியில் சட்ட விரோதமாக சாராயத்தை விற்று வந்த இருவர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 2 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் விற்று வைத்திருந்த பணம் ரூபாய் 330 கைப்பற்றப்பட்டது.

    கோவை மாவட்டம் காரமடை போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட மருதூர் அருகே செல்லப்பனூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சென்று ரோந்து பணி மேற்கொண்டபோது தண்டபாணி என்பவரது தோட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அங்கு சென்ற காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் தனிப்பிரிவு காவலர் விவின் குமார் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 2 பேர் தோட்டத்து பகுதியிலிருந்து தப்பி ஓடினர். இதனைக் கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து விசாரணை மேற் கொண்டதில் அவர்கள் மருதூர் செல்லப்பனூர் பகுதியை சேர்ந்த குமரேசன் (26) என்பதும், அவருடன் இருந்த மற்றொருவர் குட்டையூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் மேற் கொண்ட விசாரணையில் விற்பனைக்காக பிளாஸ்டிக்கேனில் 1 லிட்டர் சாராயம் வைத்திருப்பதை ஒப்புக் கொண்டனர். பின்னர் விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு லிட்டர் சாராயத்தையும், சாராயம் விற்று வைத்திருந்த பணம் ரூ.330 பணத்தையும் கைப்பற்றி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×