search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சென்னையில் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது

    திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.
    சென்னை:

    சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 3-வது நாளாக 2 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் சென்னையில் புதிதாக 1,644 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதுவரை சென்னையில் நோய் தொற்றால் 5 லட்சத்து 15 ஆயிரத்து 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 303 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். 24 ஆயிரத்து 290 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்கள்.

    கொரோனா வைரஸ்

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஏறுமுகத்தில் இருந்த நோய் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

    திருவொற்றியூர் மண்டலத்தில் 7.2 சதவீதம் நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

    இதே போல் மணலி- 4.8, மாதவரம்-6.1, தண்டையார்பேட்டை-2.6, திரு.வி.க. நகர்-0, அம்பத்தூர்-7, அண்ணாநகர்-8.2, தேனாம்பேட்டை-2.7, கோடம்பாக்கம்-6.3, வளசரவாக்கம்-5.3, ஆலந்தூர்-7, அடையாறு-3.1, பெருங்குடி-10.6, சோழிங்கநல்லூர்- 6.4 சதவீதம் நோய் பாதிப்பு குறைந்து இருக்கிறது. ஆனால் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் நோய் தொற்று பாதிப்பு உயர்வு சதவீதம் 0.7 ஆக உள்ளது.

    மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,320 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.

    மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் விவரம் வருமாறு:-

    திருவொற்றியூர்-753
    மணலி-452
    மாதவரம்-1,087
    தண்டையார்பேட்டை-1,359
    ராயபுரம்-1,523
    திரு.வி.க.நகர்-1,691
    அம்பத்தூர்-1,777
    அண்ணாநகர்-2,258
    தேனாம்பேட்டை2,076
    கோடம்பாக்கம்-2,320
    வளசரவாக்கம்-2,154
    ஆலந்தூர்-1,293
    அடையாறு-2,093
    பெருங்குடி-1,596
    சோழிங்கநல்லூர்-1,074
    Next Story
    ×