search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பூஞ்சை
    X
    கருப்பு பூஞ்சை

    கோவையில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு 87 ஆக உயர்வு

    கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் சிலர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
    கோவை:

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் மியூகோமி கோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன.

    நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், தீவிர சிகிச்சை பிரிவிவில் பல நாட்களாக இருக்கக் கூடியவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது. மூக்கில் வலி, சளியுடன் ரத்தம் வருதல், மூக்கில் துர்நாற்றம் அடிப்பது, தலைவலி, கண்ணம் பகுதியில் வலி, கண் தெளிவாக தெரியாமல் இருப்பது போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளன. இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது கண்ணம், மூக்கு பகுதிகள் கருப்பு நிறத்தில் மாறும்.

    கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் சிலர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, தற்போது வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 87 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதில், அரசு ஆஸ்பத்திரியில் 37 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 50 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், கருப்பு பூஞ்சை அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×