search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

    குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் நோயாளி ஒருவர் தப்பி ஓடியது தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தக்கலை:

    குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்த 65 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அந்த நோயாளி திடீரென தலைமறைவானார். அங்கு பணியில் இருந்த மருத்துவ பணியாளர் ஆய்வு செய்த போது நோயாளியை காணவில்லை. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர்.

    அப்போது அந்த நோயாளி வீட்டிற்கும் செல்லவில்லை என தெரியவந்தது. ஏற்கனவே இந்த நோயாளியின் மகன் கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் இருந்து வருகிறார்.

    தற்போது இதற்கிடையே சுகாதார ஊழியர்களும் அந்த நோயாளியை தேடி வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் நோயாளி ஒருவர் தப்பி ஓடியது தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×