என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் 15-ந்தேதி வரை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயணிகள் வரத்து குறைவால் சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  பயணிகள் வரத்து குறைவால் கீழ்கண்ட ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

  * திருச்சி-திருவனந்தபுரம் (02627), சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் (06851) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ஜூன் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-திருச்சி (02628), ராமேஸ்வரம்-எழும்பூர் (06852) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ஜூன் மாதம் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

  * சென்னை எழும்பூர்-குருவாயூர் (06127), குருவாயூர்-சென்னை எழும்பூர் (06128) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ஜூன் 1-ந்தேதி முதல், 15-ந்தேதி வரை திருவனந்தபுரம்- குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×