search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    கருப்பு பூஞ்சை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன் விளக்கம்

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்கனவே கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இதுபோன்ற தொற்று வர வாய்ப்புண்டு.

    * கருப்பு பூஞ்சை தொற்று அறிவிக்கப்பட வேண்டிய நோய் தொற்று.

    * கருப்பு பூஞ்சை என்ற மியூகார்மைகோசீஸ் நோய் புதிய நோய் அல்ல. கருப்பு பூஞ்சை கொரோனா தொற்று வருவதற்கு முன்பாகவே கண்டறியப்பட்ட நோய்தான். கொரோனாவுக்கு பின்னர் கருப்பு பூஞ்சை நோய் உருவானதாக கூறுவது தவறானது.

    கொரோனா வைரஸ்

    * கருப்பு பூஞ்சை தொற்று குணப்படுத்தக்கூடிய நோய் தொற்றுதான். கருப்பு பூஞ்சை தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    * சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்கனவே கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    * கருப்பு பூஞ்சை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்

    * தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை.

    * கருப்பு பூஞ்சை நோய் பாதித்தால் சுகாதாரத்துறைக்கு தகவல் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×