search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் வீட்டு வாசல் கதவில் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டிருப்பதை காணலாம்
    X
    திருச்சியில் வீட்டு வாசல் கதவில் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டிருப்பதை காணலாம்

    கொரோனா அச்சம் எதிரொலி- வீடுகளில் மீண்டும் இடம் பிடித்த வேப்பிலை தோரணம்

    கொரோனா அச்சம் எதிரொலியாக மீண்டும் வீடுகளில் வேப்பிலை தோரணம் மற்றும் வாசலில் மஞ்சள் கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
    திருச்சி:

    கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, வீடுகளுக்கு முன் வேப்பிலை தோரணங்கள் கட்டுவதில் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. கடந்த ஆண்டு (2020) கொரோனா முதல் பரவலின்போது, மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, படிப்படியாக பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தன. மக்களும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்கள், வீதிகளிலும், வீடுகளிலும் வேப்பிலை தோரணங்களை கட்டியிருந்தனர். வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரைதெளித்தனர்.

    கொரோனா 2-வது அலை தற்போது தீவிரமடைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் தினமும் 800-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் பகல் 12 மணிவரை இயல்பு நிலைதான் உள்ளது.

    அரசு, தனியார் பஸ், ஆட்டோ, டாக்சி ஓடவில்லை என்றாலும் சொந்த வாகனங்களை திருச்சி நகரில் பாதி நாட்களை ஆட்கொண்டு விடுகிறது. இதனால் கொரோனா அச்சம் விட்டபாடில்லை.

    இந்த நிலையில் தற்போது, மீண்டும் வேப்பிலை தோரணம் கட்டுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். காலை எழுந்ததும் வீடுகள் முன்பு மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரை கிருமிநாசினி போல தெளித்து வருகிறார்கள். இதனால், கிருமிகள் அண்டாது என்பது ஐதீகம் ஆகும்.

    நகர்ப்புறங்களில் வேப்பிலையை கிடைக்காது என்பதால், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கீரை கட்டுகள்போல, வேப்பிலையையும் கட்டுகளாக கட்டி ரூ.10 என்ற விலையில் சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். அதை பலர், வாங்கி சென்றதை காண முடிந்தது.
    Next Story
    ×