search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    டெல்டாவை மிரட்டும் கொரோனா- ஒரே நாளில் 1405 பேர் தொற்றால் பாதிப்பு

    கொரோனா பரவலின் வேகம் டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காரணம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றுவதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததும் காரணம்.

    தஞ்சாவூர்:

    டெல்டாவில் கொரோனாவுக்கு 8 பெண்கள் உள்பட 17 பேர் பலியானார்கள். 1,405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 870 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 162 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 264 ஆக உயர்ந்தது. தற்போது 4,454 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த 55, 64, 61, 72, 68, 84 வயது பெண்கள் மற்றும் 67, 88, 80, 44, 36 வயது ஆண்கள் உள்பட 11 பேர் பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 369 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 378 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டது. நேற்று 335 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 687 ஆக உயர்ந்தது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 48, 50 வயது ஆண், மற்றும் 48 வயது பெண் என 3 பேர் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 144 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,902 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகை மாவட்டத்தில் நேற்று 344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 373 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 630 ஆக உயர்ந்தது. தற்போது 2,020 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60, 53 வயது ஆண்கள் மற்றும் 19 வயது இளம்பெண் என 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 212 ஆக உயர்ந்துள்ளது. டெல்டாவில் ஒரே நாளில் 8 பெண்கள் உள்பட 17 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் 1,405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 870 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

    இந்நிலையில் கொரோனா பரவலின் வேகம் டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காரணம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றுவதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததும் காரணம். வணிக நிறுவனங்கள், கடைகளில் அரசு விதிமுறைகள் பின்பற்றபடுவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே டெல்டாவை மிரட்டும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பெரும் அச்சதுக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×