search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மேலப்பாளையத்தில் பெய்த மழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்ற காட்சி.
    X
    நெல்லை மேலப்பாளையத்தில் பெய்த மழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்ற காட்சி.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலையும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    அரபிக்கடலில் உருவான புதிய புயல் சின்னம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அணைப்பகுதிகளிலும் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டி பகுதியில் 40 மில்லிமீட்டர் மழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் 29 மில்லிமீட்டரும், தென்காசியில் 10 மில்லிமீட்டர் மழையும் பெய்தது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 254 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. இதனால் அணைநீர்மட்டம் நேற்றை விட சற்று உயர்ந்து இன்று 100 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் 85.22 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.33 அடியாகவும் உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று விளாத்திகுளம் பகுதியில் மட்டும் இடி-மின்னலுடன் திடீரென்று பலத்த மழை பெய்தது.

    இதில் ஸ்ரீராமபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் கோட்டைபாண்டி (55), ரமேஷ் (30) ஆகியோர் இடிதாக்கி சம்பவ இடத்தில் பலியானார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக சூரங்குடிபகுதியில் 42 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வைப்பாறில் 32 மில்லிமீட்டருக்கு மழை பெய்தது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலையும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லிமீட்டரில் வருமாறு:

    மூலக்கரைப்பட்டி-40, பாபநாசம்-29, கொடுமுடியாறு-18, தென்காசி-10, நாங்குநேரி-10, அடவிநயினார்-10, சேர்வலாறு-9, சேரன்மகாதேவி-9, கண்ணடியன்கால்வாய்-8.4, ராதாபுரம்-8.6, பாளை-7, குண்டாறு-7, களக்காடு-6.2, நெல்லை-5.2, செங்கோட்டை-3, மணி முத்தாறு-2.4, கருப்பாநதி-1.5.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    சூரங்குடி-42, வைப்பார்-32, வேடநத்தம்-5, காடல்குடி-4, திருச்செந்தூர்-3, விளாத்திகுளம்-2, சாத்தான்குளம்-1.4.

    Next Story
    ×