search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேக்கரி கடைக்கு தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் சீல் வைத்தபோது எடுத்த படம்
    X
    பேக்கரி கடைக்கு தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் சீல் வைத்தபோது எடுத்த படம்

    தருமபுரியில் 12 மணியை தாண்டியும் வியாபாரம்- பேக்கரி கடைக்கு ‘சீல்’ வைப்பு

    தருமபுரியில், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட பேக்கரி கடைக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    தருமபுரி:

    தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, ஒட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகள் பகல், 12 மணி வரை திறந்திருக்க, அரசு அனுமதியளித்துள்ளது.

    இந்த நிலையில், தருமபுரி அடுத்த மதிகோண்பாளையம் பகுதியில், தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது மதியம் 1 மணிக்கு கடையை திறந்து வைத்து பொது மக்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த பேக்கரியை கண்டார்.

    இதனால் பேக்கரி கடையின் உரிமையாளர் திருப்பதியை (வயது 39) எச்சரித்த அவர், இதுபற்றி தருமபுரி தாசில்தார் ரமேஷூக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அங்கு வந்த அவர், அரசு அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து செயல்பட்ட பேக்கரிக்கு, சீல் வைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி, போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த் துறை ஊழியர்கள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.



    Next Story
    ×