search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வரத்து குறைவு எதிரொலி- பொள்ளாச்சியில் வாழைத்தார்கள் விலை உயர்வு

    பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு மொத்தம் 700 வாழைத்தார்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் பூவன் வாழைத்தார் ரூ.500 முதல் ரூ.600-க்கு ஏலம் போனது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடக்கும். இங்கு பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, ஆத்து பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, உடுமலை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வாழைத்தார் ஏலம் நடக்கவில்லை. இதனிடையே இன்று முதல் தமிழகத்தில் இரண்டு வாரம் முழு ஊரடங்கு என்பதால் நேற்று அனைத்து கடைகளும் இயங்கின.

    பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு மொத்தம் 700 வாழைத்தார்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் பூவன் வாழைத்தார் ரூ.500 முதல் ரூ.600-க்கும்,

    செவ்வாழை ரூ.300 முதல் ரூ.900-க்கும், கற்பூரவள்ளி ரூ.250 முதல் ரூ.150 க்கும், மோரிஸ் ரூ.150 முதல் ரூ.200-க்கும் ஏலம் போனது. நேந்திரன் கிலோ ரூ.42-க்கும் கதளி ரூ.28 க்கும் ஏலம் போனது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழக அரசு கொரோனா பரவல் காரணம் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் வாழைப்பழம் விற்பனை சரியும் என்பதால் வெறும் 700 தார்கள் மட்டும் வந்தன. இதனால் நேற்று தாருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்து காணப்பட்டது என்றனர்.

    Next Story
    ×