search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 156 படுக்கைகள்

    திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது
    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 156 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெறுவதற்கு பல்வேறு பகுதிகளில் கொரோனா படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறவர்கள் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

    கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதன் மூலம் அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு ஆஸ்பத்திரியில் 156 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவைப்படுகிறவர்கள் இந்த படுக்கைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். அதன்படி இதுவரை 122 படுக்கைகள் அரசு ஆஸ்பத்திரியில் பயன்பாட்டில் உள்ளது. கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர டி பிரிவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் 19, பி பிரிவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் 72 மற்றும் லிக்யூட் ஆக்சிஜன் 4 ஆயிரத்து 5 லிட்டர் கைவசம் இருந்து வருகிறது. மேலும், ஆக்சிஜனை கூடுதலாக இருப்பு வைக்க 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது. கொரோனா நோயாளிகள் அச்சமின்றி சிகிச்சை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×