search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவையில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 116 பேருக்கு கொரோனா தொற்று

    கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் கோவை- தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்படுகிறது.

    வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், போலீசார், ஊழியர்கள் உள்பட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் அல்லது கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் கோவை- தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரிசோதனை

    வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் 2 நாட்கள் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

    இதில் அரசு ஊழியர்கள், தேர்தல் அலுவலர்கள், அதிகாரிகள், நுண் பார்வையாளர்கள், போலீசார், உதவி தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கொரோனா பரிசோதனைக்கான முடிவுகள் இன்று வெளிவந்தன. அதில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 116 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முகவர்கள் உள்பட 116 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கோவையில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×