search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
    X
    முக ஸ்டாலின் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

    மே தின நிகழ்ச்சி- அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்து வந்து மே தின நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    மே 1-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்து மரியாதை செலுத்துவார்கள்.

    இப்போது கொரோனா பரவல் காலமாக உள்ளதால் பூங்காவில் திரளாக வந்து செல்ல அனுமதியில்லை. இதன் காரணமாக தொழிற்சங்கத்தினர் அவரவர் கட்சி அலுவலகங்களில் மரியாதை செலுத்தினார்கள்.

    தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. சார்பில் இன்று அண்ணா அறிவாலயத்தில் மே தின நினைவு தூண் அமைக்கப்பட்டிருந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்து வந்து நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி எம்.பி., சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு, தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன் உள்பட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கொரோனா வைரஸ்

    இது பற்றி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×