search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்தில் மரப்பட்டறையில் இருந்த பொருட்கள் எரிந்து கிடந்த காட்சி.
    X
    தீ விபத்தில் மரப்பட்டறையில் இருந்த பொருட்கள் எரிந்து கிடந்த காட்சி.

    கூத்தாநல்லூர் அருகே மரப்பட்டறையில் தீ விபத்து- ரூ. 2 லட்சம் பொருட்கள் நாசம்

    கூத்தாநல்லூர் அருகே மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, சின்னக்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது40). இவர் வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரம் கடைவீதியில் மர இழைப்பகம் நடத்தி வருகிறார். வழக்கம்போல், கடையில் நடைபெற்ற மர இழைப்பு வேலைகள் முடிந்த பின் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு முருகேசன் சின்னக்கொத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென மர இழைப்பக கடையின் உள்பக்கம் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மர இழைப்பக எந்திரங்கள் உட்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மரப்பட்டறையில் எப்படி தீப்பிடித்தது? என தெரியவில்லை. அதிகாலையில் மரப்பட்டறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×