search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா கட்டுப்பாடுகளால் பஸ்களில் கூட்ட நெரிசல்- கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

    கொரோனா கட்டுப்பாடுகளால் வெளி மாவட்டங்களில் இருந்து காலை, மாலை நேரங்களில் மதுரைக்கு வந்து செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை:

    ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைகளுக்கும், மதுரையை சார்ந்தே உள்ளனர்.

    வேலை வாய்ப்பு, மருத்துவம், வர்த்தகம் ஆகிய வற்றுக்காகவும் தினமும் ஏராளமானோர் மதுரைக்கு வந்து செல்கின்றனர்.

    மேற்கண்ட மாவட் டங்களில் இருந்து மதுரைக்கு காலையில் வரும் பஸ்களிலும், மதுரை யில் இருந்து மாலையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு திரும்பும் பஸ்களிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதனால் பஸ்களில் செல்ல பயணிகள் அச்சப்படும் நிலை உள்ளது.

    வழக்கம் போல் தினமும் பணிக்கு செல்லும் பயணி கள் அச்சமடைந்து உள் ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களில் காலையில் மதுரைக்கு ரெயில் சேவையும் இல்லாத தால் ரெயில் பயணிகள் கூட்டமும் பஸ்களிலேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே காலை, மாலை வேளைகளில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதற்கு பதிலாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பஸ்களின் சேவையை ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

    மானாமதுரை, ராஜ கம்பீரம், முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி, திருப்பு வனம் பகுதிகளில் இருந்து மதுரை வந்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிப் படுகின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.

    இந்த பகுதிகளில் இருந்து பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பஸ் நிலையங்களுக்கு டவுன் பஸ்கள் சேவையை அதி கரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×