search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொலைபேசி
    X
    தொலைபேசி

    கொரோனா பரவல் அதிகரிப்பு- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உதவிபெற தொலைபேசி எண்கள்

    வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் 9 மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு பெறப்படும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று 2-வது அலை பரவலையடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றிட உகந்த சூழ்நிலையை உருவாக்கவும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப செல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்திட ஏதுவாகவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யவும் தொழிலாளர் துறையில் மாநில கட்டுப்பாட்டு அரை உருவாக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    எனவே தொழிலாளர்கள், 044-24321438, 044-24321408 ஆகிய அவசர உதவி எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம். எனவே தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் எந்தவித அச்சமோ, பதற்றமோ அடையாமல் தங்கள் பணியிடங்களில் தொடர்ந்து பணிபுரியுமாறு அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகட்டுதல்களை பின்பற்றலாம்.

    மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் 9 மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு பெறப்படும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×