search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கைது
    X
    கைது

    தென்காசி அருகே கள்- மது விற்ற 7 பேர் கைது

    தென்காசி அருகே கள்- மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்களை கைது செய்ய தனிப்படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக தென்காசி மாவட்டத்தில் 6 பேரையும், கள் விற்பனை செய்த ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 51 மதுபாட்டில்கள், 30 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×