search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆலங்குளம் அருகே 3 பள்ளி ஆசிரியைகள்- 7 மாணவிகளுக்கு கொரோனோ

    மாறாந்தையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆசிரியைகள், மாணவிகள் என மொத்தம் 77 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 மாணவிகளுக்கும், 2 ஆசிரியைகளுக்கும் தொற்று உறுதியானது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 4 பிரிவுகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த பள்ளியில் பணியாற்றிய நெல்லை டவுனை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் சிவகிரியில் தேர்தல் பணிக்கு சென்று இருந்தார். அவருக்கு அந்த நாள் முதல் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்த அவருக்கு தொற்று உறுதியாகியது.

    இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியையுடன் தொடர்பில் இருந்த ஏனைய ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் பரிசோதனை செய்ய தலைமை ஆசிரியை அறிவுறுத்தினார்.

    மாறாந்தையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆசிரியைகள், மாணவிகள் என மொத்தம் 77 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 மாணவிகளுக்கும், 2 ஆசிரியைகளுக்கும் தொற்று உறுதியானது.

    இதனால் அவர்களை சுகாதாரத்துறையினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அழைத்து சென்றனர். தற்போது பிளஸ்-2 மாணவர் களுக்கு செய்முறைத்தேர்வு நடைபெற்று வருகிறது. கொரோனாவால் பாதிக் கப்பட்ட 7 மாணவிகளும் செய்முறை தேர்வில் பங்கேற்க முடியாது என்பதால் அவர்களுக்கு ஒரு வாரம் கழித்து தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×