search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 227 பேருக்கு கொரோனா

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 8 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இவர்கள் அனைவரும் தற்போது கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 721 ஆக உள்ளது. 1,695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி 231 பேர் பலியாகியுள்ளனர்.

    பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×